Home நாடு இறந்த இரு இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 10,000 ரிங்கிட் இழப்பீடு

இறந்த இரு இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 10,000 ரிங்கிட் இழப்பீடு

619
0
SHARE
Ad

2மார்ச் 13 – லகாட் டத்துவில் நேற்று ஊடுருவல்காரர்களுக்கு எதிரான துப்பாக்கிச் சண்டையில் மலேசியப் பாதுகாப்புப் படை வீரர் அகமத் ஹுரைரா (வயது 24) வீர மரணம் அடைந்தார். நாட்டைப் பாதுகாக்கப்பதற்காக தன் உயிரையே தியாகம் செய்த அவ்வீரரின் மரணத்தை அவரது தந்தை இஸ்மாயிலும் (வயது 55), தாயார் ரஹமாவும் (வயது 50) ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதுபற்றி கம்போங் பாயு லாலாங்கில் வசித்துவரும் அவரது தந்தை இஸ்மாயில் கூறுகையில்,” எனது மகனை நான் கடைசியாகக் கடந்த 2010 ஆம் ஆண்டு பார்த்தேன்.அதன் பின்பு, நாங்கள் தொலைப்பேசியின் மூலமும், குறுஞ்செய்திகளின் வழியாகவும் தொடர்பில் இருந்தோம்.அகமத் ஹுரைராவுக்கு உடன் பிறந்தவர்கள் 12 பேர் அதில் அவர் 3 ஆவது பிள்ளை ஆவார். கடந்த நான்கு வருடங்களாக இராணுவத்தில் பணியாற்றி வந்தார்.” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், நேற்று சாலை விபத்தில் பலியான மற்றொரு மலேசியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் அகமத் பர்கான் (வயது 21), தனது சிறு வயது முதல் ராணுவத்தில் சேர மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார் என்று அவரது மாமா முகமத் ஜாக்கி கானி (வயது – 47), பாசீர் தம்போ என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், ” அகமத் பர்கான் அவரது தந்தை ரஷ்லான் ஹஸ்ஸானைப் பின்பற்றி இரண்டு வருடங்களுக்கு முன் இராணுவத்தில் இணைந்தார். கடந்த வாரம்  ‘ஓப்ஸ் டௌலத்’  நடவடிக்கையில் தான் இணைத்து செயல்படப்போவதாக அவரது தாயிடம் தகவல் தெரிவித்துவிட்டு சபா சென்றார்” என்று தெரிவித்தார். இறந்த அந்த இராணுவ வீரரின் இல்லத்தில், தனது மகனின் இறப்பு செய்தி கேட்ட அவரது தாய் ரோஸ்லாவாத்தி (வயது 44), தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளமுடியாமல் உள்ளார். இந்நிலையில்,இராணுவ வீரர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறியவண்ணம் உடன் இருக்கின்றனர்.

மேலும், சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஸ்தபா முகமத் இறந்தவர்களின் குடும்பத்தினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, 10,000 ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையையும் வழங்கியுள்ளார்.