Home Featured கலையுலகம் திடீர் மூட்டு வலி: நடிகர் அஜித்துக்கு அறுவை சிகிச்சை

திடீர் மூட்டு வலி: நடிகர் அஜித்துக்கு அறுவை சிகிச்சை

821
0
SHARE
Ad

ajithoriginalசென்னை- நடிகர் அஜித்துக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று வியாழக்கிழமை அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திடீர் மூட்டு வலி காரணமாகவே அவருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜீத் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளியன்று வெளியான ‘வேதாளம்’ திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு திடீரென மூட்டு வலி ஏற்பட்டதாகவும், இதனால் அஜீத் மிகவும் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மருத்துவ ஆலோசனை பெற்றபோது உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்வது நல்லது என மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
எனவே வியாழக்கிழமை காலை அவர் போரூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வியாழக்கிழமை மாலையே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

“தற்போது அவர் நலமாக உள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வழக்கமான மருத்துவ கண்காணிப்பு காலம் முடிவடைந்த பிறகு அவர் வீடு திரும்புவார்,” என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.