யாங்கூன் (மியன்மார்) – மியன்மார் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சியான ஆங் சாங் சு கி தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
மொத்தம் உள்ள 664 இடங்களில், 329 இடங்களை பிடித்து ஆங் சாங் சு கி கட்சி பெரும்பான்மையில் உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியன்மாரில் இராணுவ ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் முதன் முதலாக ஜனநாயக முறைப்படி பொதுத்தேர்தல் நடைபெற்றது.
இதனிடையே, அரசியல் கைதியான சு கி விரைவில் காவலில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில், அவர் வெளிநாட்டவரை திருமணம் செய்துள்ள காரணத்தினால் அதிபர் ஆக முடியாத நிலையில், தகுதியானவரை அவர் அதிபராக நியமிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.