கோலாலம்பூர் – ஏர் ஆசியா நிறுவனம் தனது அனைத்து முனையங்களுக்கும் 3 மில்லியன் இருக்கைகள் இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த விமான சேவைகளுக்கான அடிப்படைக் கட்டணம் 0 ரிங்கிட் முதல் தொடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த சேவையில் விமான நிலையக் கட்டணம், வரி மற்றும் பிற கட்டணங்கள் சேராது.
இதற்கான கட்டண முன்பதிவு நவம்பர் 23-ம் தேதி (நாளை) தொடங்கி ஏழு நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவைப் பயன்படுத்தி 2016-ம் ஆண்டு மே மாதம் 1 முதல் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வரை பயணம் செய்யலாம்.
ஏர் ஆசியா எக்ஸ்
தாய் நிறுவனமான ஏர் ஆசியாவின் விலைக் குறைப்பு நடவடிக்கையை ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனமும் பின்பற்றி, கோலாலம்பூரில் இருந்து இந்தியாவிற்கான விமான போக்குவரத்தில் விலைக் குறைப்பில் ஈடுபட்டுள்ளது.
கோலாலம்பூரில் இருந்து புது டெல்லிக்கு மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கி உள்ளதால், அதனை கொண்டாடும் வகையில் குறைந்தபட்ச கட்டணமாக ஒரு வழிப் பயணத்திற்கு 399 ரிங்கிட் என நிர்ணயித்துள்ளது.
இதற்கான முன்பதிவும் நவம்பர் 23-ம் தேதி (நாளை) தொடங்கி ஏழு நாட்களுக்கு நீடிக்கும். இதற்கான பயணக் காலம் 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 முதல் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வரை ஆகும்.