Home Featured நாடு இந்தியாவில் இருந்து ஆங்கில ஆசிரியர்கள்! இப்போதைக்கு இல்லை!

இந்தியாவில் இருந்து ஆங்கில ஆசிரியர்கள்! இப்போதைக்கு இல்லை!

651
0
SHARE
Ad

கோலாலம்பூர்- இந்தியாவில் இருந்து ஆங்கில ஆசிரியர்களை அழைத்து வரும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர் இத்திட்டம் தொடர்பாக விரிவான மதிப்பீடு செய்யப்பட வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.

Mahdzir Khalid

இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல், இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் உட்பட வேறு சில நாடுகளில் இருந்தும் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அழைத்து வருவதும் இத்திட்டத்தில் உள்ளடங்கியிருப்பதாக மாட்சிர் (படம்) குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“தற்போது அத்திட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறோம். அடுத்த ஆண்டு இதுகுறித்து கருத்து தெரிவிப்பேன்” என்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் மேலும் கூறினார்.

“சிறப்பு பயிற்சியாளர்களைக் கொண்டு பள்ளிகளுக்கு திறனூட்டும்” (School Improvement Specialist Coaches -SISC+) திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து தகுதிபெற்ற ஆங்கில ஆசிரியர்களை அழைத்து வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ஆசிரியர்களை கிராமப்புற பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு அனுப்புவதன் மூலம், உள்நாட்டு ஆங்கில ஆசிரியர்களின் மொழித்திறனை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.