Home நடந்த நிகழ்ச்சிகள் ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டில் ‘நாளை நமதே’ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டில் ‘நாளை நமதே’ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

657
0
SHARE
Ad

smcகிள்ளான், மார்ச்.13- நேற்று முன்தினம் கிள்ளான் ஹொக்கியோன் சீன மண்டபத்தில் காலை9.00 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘நாளை நமதே’  எனும் நிகழ்வில் 3000 க்கும் மேற்பட்ட பெற்றோர் – மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சரியான வழி காட்டல், நிபந்தனையற்ற அன்பு இருக்குமாயின் ஒவ்வொரு மாணவனையும் சிறந்த சாதனையாளராக உருவாக்க முடியும் என்பது திண்ணம் என்று ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வீ.ரவீந்திரன் தன் வரவேற்புரையில் கூறினார்.

அதன் பிறகு, ஸ்ரீ முருகன் நிலையத்தின் அமைப்பாளாரான  டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் தம்பிராஜா, இந்தியர்களின் சிறப்பைப் பற்றியும் கல்வியில் முன்னேறி வரும் மாணவர்களைப் பற்றியும் கருத்துரைத்தார்.

#TamilSchoolmychoice

“கடந்த 31 வருடங்களில் பல ஆயிரம் மலேசிய இந்திய மாணவர்களை கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்கி வளர்த்துள்ள  ஸ்ரீ முருகன் நிலையத்தின் சேவை அளப்பரியது” என்று இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட கிள்ளான் மேற்குத்துறைமுக உரிமையாளரான தொழிலதிபர் டான்ஸ்ரீ ஞானலிங்கம் புகழாரம் சூட்டினார்.