Home Featured தமிழ் நாடு சென்னை விமான நிலையத்தில் வெள்ளம் – மீட்புப் பணியில் இராணுவம்!

சென்னை விமான நிலையத்தில் வெள்ளம் – மீட்புப் பணியில் இராணுவம்!

911
0
SHARE
Ad

chennaiசென்னை – தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையம் மற்றும் ஓடு பாதையில் வெள்ளம் ஏற்பட்டதால், விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

சென்னையில் தரையிறங்கவிருந்த விமானங்கள் யாவும் பெங்களூரு விமானநிலையத்திற்கும், ஐதராபாத் விமான நிலையத்திற்கும் திருப்பி விடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், 31 இரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 11 இரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

தற்போது வெள்ள மீட்புப் பணியில் இந்திய இராணுவம் தீவிரமாக இறங்கியுள்ளது.