சென்னை – சென்னை வெள்ளக்காடாக மிதக்கும் நிலையில், சென்னையின் முக்கிய சுற்றுலாத் தளமான வண்டலூர் வன உயிரிகள் சரணாலயத்தின் சுற்றுச் சுவர், வெள்ளம் காரணமாக 200 மீட்டர் தூரத்திற்கு 8 இடங்களில் உடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதன் காரணமாக வன உயிரினங்கள் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நகரின் முக்கியப் பகுதிகளில் மாநகராட்சி கவனம் செலுத்தி வரும் நிலையில், தொலைவில் இருக்கும் வண்டலூர் சரணாலயத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என டுவிட்டர் உள்ளிட்ட ஊடகங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இதற்கிடையே வாகனத்தில் செல்லும் பயணி ஒருவர், சரணாலயத்திற்குள் வெள்ளம் புகுந்ததை காணொளியாக்கி உள்ளார். அதனை கீழே காண்க:
https://www.youtube.com/watch?v=SYpXjCGZc6c