Home Featured தமிழ் நாடு சென்னை வெள்ள நிலவரம்: இன்று காலை வரையிலான செய்திகள்!

சென்னை வெள்ள நிலவரம்: இன்று காலை வரையிலான செய்திகள்!

624
0
SHARE
Ad

Floods in Chennai claim hundreds of livesசென்னை: மீண்டும் நேற்று மழை பெய்யத் தொடங்கி சென்னை மக்களின் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியுள்ள நிலையில் இன்று காலை 9.00 மணி (மலேசிய நேரம்) வரையிலான தமிழகம் மற்றும் சென்னை மாநகர வெள்ள நிலவரத்தின் தகவல்கள் – சில வரிகளில்!

  • இன்று முதல் சென்னை விமான நிலையம் முழுமையாக இயங்கத் தொடங்கும் என அறிவிப்பு
  • ஏற்கனவே கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய இராணுவம் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அங்கு விரைந்துள்ளது.
  • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை திமுக தொண்டர்கள் நேரடியாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வழங்க வேண்டுமென கலைஞர் கருணாநிதி வேண்டுகோள்
  • வெள்ளம் காரணமாக கடந்த சில நாட்களாகத் தடைபட்டிருந்த மெட்ரோ இரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 5 மணி முதல் மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்டது.
  • நாளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்னை வெள்ள நிலவரம் காண வருகை தருவார் என எதிர்பார்ப்பு
  • 14 இலட்சத்து 32 ஆயிரம் பேர் இதுவரை மீட்கப்பட்டு நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
  • தேசிய பேரிடர், மீட்புக் குழு இதுவரையில் மேற்கொண்ட மீட்புப் பணிகளிலேயே மிகப் பிரம்மாண்டமானது சென்னை வெள்ளம்தான் என அறிவிப்பு
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • இன்று முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்களிலிருந்து இரயில் சேவைகள் வழக்கம்போல் மீண்டும் தொடங்கும் என தென்னக இரயில்வே அறிவிப்பு
  • அமைச்சர் ஓபிஎஸ் பன்னீர் செல்வம் கமலை மிரட்டுவது போல் பேசுகின்றார் என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை