Home Featured நாடு 2.6 பில்லியன் விவகாரம்: நஜிப்பிற்கு சட்டத்துறை ஆலோசனை கூறுவது தவறு – சுரேந்திரன் கருத்து!

2.6 பில்லியன் விவகாரம்: நஜிப்பிற்கு சட்டத்துறை ஆலோசனை கூறுவது தவறு – சுரேந்திரன் கருத்து!

854
0
SHARE
Ad

N.Surendranகோலாலம்பூர் – 2.6 பில்லியன் நன்கொடை குறித்து தனிப்பட்ட விளக்கமளிக்க வேண்டாம் என சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆலோசனை கூறுவது அவரது கடமைக்கு எதிரானது என பிகேஆர் சாடியுள்ளது.

இது குறித்து பிகேஆரின் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நஜிப்பிற்கு அபாண்டி ஆலோசனை கூறுவது அவரது கடமைக்கு எதிரானது. காரணம் தற்போது நஜிப் ஊழல் குற்றச்சாட்டில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்” எனத் தெரிவித்துள்ளார்.

“கூட்டரசு அரசியலமைப்பு ஆர்ட்டிக்கில் 145(3)- கீழ், எந்த ஒரு வழக்கிற்கும் வழிகாட்ட சட்டத்துறைக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரையில், பிரதமரே அந்த வழக்கின் விசாரணையில் இருப்பதால், சட்டத்துறை அவருக்கு ஆலோசனை வழங்குவது கடமைக்கு எதிரானது” என்று சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice