Home Slider இன்று முதல் சென்னை விமான நிலையத்தின் சேவை மீண்டும் தொடங்குகிறது!

இன்று முதல் சென்னை விமான நிலையத்தின் சேவை மீண்டும் தொடங்குகிறது!

551
0
SHARE
Ad

chennai 2சென்னை – சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இன்று காலை முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, விமான நிலையத்தின் ஓடு பாதைகளும் நீரில் மூழ்கின. இதனைத் தொடர்ந்து கடந்த புதன் கிழமை முதல் சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை முதல் விமான நிலையம் திறக்கப்பட்டு, பகல் நேர உள்நாட்டு விமான சேவை மட்டும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே மழையின் வேகம் குறைந்துள்ளதால், இன்று முதல் மீண்டும் இயக்கம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.