Home Featured நாடு அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் தலைமை உரையின் முக்கிய அம்சங்கள் – கருத்துகள்! (தொகுப்பு –...

அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் தலைமை உரையின் முக்கிய அம்சங்கள் – கருத்துகள்! (தொகுப்பு – 3)

695
0
SHARE
Ad

najib2_umnoகோலாலம்பூர்: இன்று காலை தொடங்கிய அம்னோ பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் உரையின் முக்கிய சில அம்சங்கள், கருத்துக்கள் அடங்கிய தொகுப்பின் மூன்றாவது பாகம்:

  • எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிக் கூட்டணியை ஜசெக ஆக்கிரமிக்க நினைக்கின்றது. சரவாக்கில் கூட பாஸ் கட்சியுடனும், பிகேஆர் கட்சியுடனும் கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள ஜசெக அதன்மூலம் மேலும் கூடுதலான தொகுதிகளில் போட்டியிட நினைக்கின்றது.
  • அண்மையில், ஜசெக ஆளும் பினாங்கு மாநிலத்தில் பெனாந்தி சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதியில் உள்ள மலாய்க்காரர்களுக்கு உதவி செய்ய முடியவில்லையே என கண்ணீர் விட்டு சட்டமன்றத்தில் அழுதிருக்கின்றார். அம்னோவின் ஆதிக்கம் இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
  • இதுதான் ஜசெகவின் குணம். தனது அரசியல் சகாக்களுடன் அந்தக் கட்சி எப்போதுமே அது விசுவாசமாக இருந்ததில்லை. 1990இல் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைந்த ஜசெக 1995இல் அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறியது. பிறகு இரண்டு முறை கூட்டணி அமைத்து இரண்டு முறையும் கூட்டணிகளை முறித்துக் கொண்டது. அதன்படி பார்த்தால் ஜசெக இதுவரை மூன்று முறை விவாகரத்து செய்துள்ளது.
  • ஜனநாயகத்தைப் புரியாதவர்கள் அல்ல நாங்கள். ஆனால் இரண்டு கட்சி ஆட்சி முறை என்பதை எந்தக் காலத்திலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
  • இன்றைய அரசியலில் உண்மையான நிலவரம் என்னவென்றால் மக்களுக்கு இரண்டே இரண்டு தேர்வுகள்தான் உள்ளன. ஒன்று, தற்போதுள்ளபடி அம்னோவின் தலைமைத்துவத்தின் கீழ் ஆட்சியில் இருக்கும் கூட்டணியை ஏற்பது அல்லது ஜசெக தலைமை ஏற்கப்போகும் அல்லது ஆக்கிரமிக்கப் போகும் மற்றொரு எதிர்க்கட்சிக் கூட்டணியை ஆதரிப்பது. இந்த இரண்டில் ஒன்றை மக்கள் தேர்வு செய்தாக வேண்டும்.
  • ஆக, அம்னோவை ஆட்சியிலிருந்து அகற்றினால், அதற்குப் பதிலாக ஆட்சி செய்யப்போவது, இஸ்லாமுக்கு எதிரான, மலாய் இனத்துக்கும் பூமிபுத்ராக்களுக்கும் எதிரான கொள்கை கொண்ட ஒரு கட்சிதான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
  • எந்தக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் நாம் பின்வாங்கப் போவதில்லை. சரணடையப் போவதில்லை. அம்னோவுக்காகவும், மலாய் இனத்துக்காகவும், இஸ்லாமுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்.

-செல்லியல் தொகுப்பு

படம்: நன்றி ‘ஸ்டார்’

#TamilSchoolmychoice

பிரதமர் நஜிப் துன் ரசாக்கிம் தலைமை உரை தொடர்பில் மேலும் படிக்க: