Home உலகம் உலகின் மிகச்சிறந்த ஸ்டைலிஷான பெண்மணியாம் மிச்செல் ஒபாமா…

உலகின் மிகச்சிறந்த ஸ்டைலிஷான பெண்மணியாம் மிச்செல் ஒபாமா…

646
0
SHARE
Ad

imagesஅமெரிக்கா,மார்ச்.14-அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா உலகின் மிக சிறந்த நவநாகரீக (ஸ்டைலிஷ்) பெண்மணி என்று சண்டே டைம்ஸ் ஸ்டைல் செய்தி இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் ராணி எலிசபெத் மற்றும் விக்டோரியா பெக்காம் ஆகியோரை புறந்தள்ளி விட்டு 49 வயதான மிச்செல் ஒபாமா இடம் பிடித்துள்ளார். அமெரிக்க நாட்டின் முதல் குடிமகள் என்பதால் தம்மை மற்றவர்கள் முன் முன்னிறுத்தும் போது நாகரீகத்தை நல்ல முறையில் வெளிப்படுத்தும் வகையில் உடை அணிந்து உள்ளார் என அவர் குறித்து கருத்துகள் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்த டாப் 25 பட்டியலில் நவநாகரீக ஆடை வடிவமைப்பாளரும் ஸ்பைஸ் கேர்ள்ஸ் பாடகியுமான விக்டோரியா பெக்காம், ஹாலிவுட் தம்பதிகளான பிராட் பிட் மற்றும் ஏஞ்சலினாவின் 6 வயது மகளான ஷிலோ மற்றும் நடிகை டேம் ஹெலன் மிர்ரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், பாடகி லேடி ககா மோசமான உடையணிந்தவர் என்று செய்தியும் அந்த  இதழில் பட்டியலிடப்பட்டுள்ளது.