Home Featured நாடு மலேசியக் குடிநுழைவு அலுவலகங்களுக்கு 4 நாட்கள் விடுமுறை!

மலேசியக் குடிநுழைவு அலுவலகங்களுக்கு 4 நாட்கள் விடுமுறை!

553
0
SHARE
Ad

Malaysian Passportகோலாலம்பூர் – கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநிலம் தவிர நாட்டின் அனைத்து குடிநுழைவுத் துறை இலாகா மற்றும் கடப்பிதழ் வழங்கும் அலுவலகங்களுக்கு, வரும் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் மற்றும் கிறிஸ்துமஸ் தினம் ஆகியவற்றை முன்னிட்டு இந்த நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநிலத்தில் மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை அலுவலகங்கள் செயல்படும் என்றும், மற்ற மாநிலங்களிலுள்ள அலுவலகங்கள் நான்கு நாட்களுக்கு செயல்படாது என்றும் குடிநுழைவுத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த விடுமுறை குறித்து மேல் விவரங்களுக்கு குடிநுழைவுத்துறையின் கட்டுப்பாட்டு அறையின் 03-88801555 தொடர்பு கொள்ளலாம் என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.