Home நாடு சபாவில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் மூன்று பகுதிகள்

சபாவில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் மூன்று பகுதிகள்

450
0
SHARE
Ad

2லகாட் டத்து, மார்ச் 14 – ஊடுருவல்காரர்களுக்கு எதிரான துடைத்தொழிப்பு நடவடிக்கையில் மலேசியப் பாதுகாப்புப்படையினர் இதுவரை மூன்று பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்

இன்று காலை அந்தப் பகுதிகளான  கம்போங் தண்டுவா, சுங்கை நியாமுக் மற்றும் தஞ்சோங் பத்து ஆகிய இடங்களில் மீண்டும் எதிரிகள் நுழையாமல் தடுக்கத்  தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படும் என்று பாதுகாப்புப்படைத் தலைவர் ஸுல்க்கி பெலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவருடன் இருந்த காவல்துறைத் தலைவர் இஸ்மாயில் ஓமாரும், ஸுல்க்கிபிலியின் கருத்தை ஆமோதித்தார். மேலும் சபாவில் மிக விரைவில் அமைதியை நிலை நாட்டி, சபாவாசிகளை நிம்மதியாக தங்கள் கிராமங்களில் மீண்டும் குடியேற வழி செய்வோம் என்றும் அவர் உறுதியளித்தார்.