Home Featured நாடு அன்வாருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் – அரசு சாரா இயக்கங்கள் கோரிக்கை!

அன்வாருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் – அரசு சாரா இயக்கங்கள் கோரிக்கை!

745
0
SHARE
Ad

Nobel-Peace-Prize-Anwar-Ibrahimகோலாலம்பூர் – அமைதியான முறையில் எதிர்கட்சியை வழிநடத்தி வரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு, 2016-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, வழங்கப்பட வேண்டும் என்று கூறி மலேசியாவைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அரசு சாரா இயக்கங்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இது குறித்து இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஓட்டாய் ரீபார்மசி என்ற இயக்கத்தின் தலைவர் சாரி சுங்கிப், அமைதியான முறையில் தனது கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தி வந்த அன்வார் இப்ராகிம் சிறையில் அடைக்கப்பட்டு அரசியல் கைதியாக ஆக்கப்பட்டுள்ளதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் (Amnesty International) பிரகடனப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அம்னெஸ்டி இரண்டு முறை அவரை நோபல் பரிசிற்குப் பரிந்துரைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எத்தனையோ விருதுகளை அன்வார் வாங்கியிருந்தாலும், அவரை உலக அளவில் அமைதியின் சின்னமாகப் பார்க்க இந்த நோபல் பரிசு அவசியம் என்றும் சாரா குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிகேஆர் கட்சியின் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, பல அனைத்துலக நிறுவனங்கள் இணைந்து அன்வாரை நோபல் பரிசிற்குப் பரிந்துரைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

படம்: நன்றி (Free Malaysia Today)