கோலாலம்பூர் – நேற்று வடகொரியா நடத்திய அணு ஆயுத (ஹைட்ரஜன் குண்டு) சோதனைக்கு மலேசியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்கள் மற்றும் உலக அமைதிக்கும், அணு ஆயுதங்கள் இல்லாத ஆட்சி நடத்தும் கொள்கைக்கும் முற்றிலும் எதிரானதாக இந்த சோதனை முயற்சி அமைந்துள்ளது என்று மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் அனிபா அம்மான் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்களின் குடியரசான கொரியா, மேலும் இது போன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபடாமல், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தீர்மானங்களைப் பின்பற்றி, பிராந்திய மற்றும் உலக அமைதியையும், பாதுகாப்பையும் நிலைத்து நிற்கச் செய்ய வேண்டும் என்றும் மலேசியா வலியுறுத்தியுள்ளது.