பகாங் – பகாங்கில் நடைபெற்று வரும் பாக்சைட் சுரங்கம் தோண்டும் பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நேற்று அறிவித்துள்ளது.
அப்பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக பொதுமக்கள் மத்தியில் இருந்து எழுந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் எம்ஏசிசி தெரிவித்துள்ளது.
“இந்த விவகாரத்தை கடுமையாகப் பார்க்கும் எம்ஏசிசி, ஊழலில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீது எம்ஏசிசி சட்டம் 2009-ன் கீழ் நடவடிக்கை எடுக்கத் தயங்காது” என்றும் எம்ஏசிசி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.