Home Featured உலகம் ஜாகர்த்தா தாக்குதல்: காயமடைந்த மற்றொருவர் மரணம்!

ஜாகர்த்தா தாக்குதல்: காயமடைந்த மற்றொருவர் மரணம்!

613
0
SHARE
Ad

ஜாகர்த்தா: கடந்த ஜனவரி 14ஆம் தேதி வியாழக்கிழமை ஜாகர்த்தாவில் நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவர் இன்று மரணமடைந்ததைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ 30ஆக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Bomb blast aftermath in Jakartaஜாகர்த்தா காவல் துறையினர் வழங்கிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் மரணமடைந்த தீவிரவாதி அடையாளம் காட்டப்படுகின்றார்.

#TamilSchoolmychoice

மரணமடைந்த 7 பேரின் அடையாளங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பலியான 4 தீவிரவாதிகள் சுகித்தோ (43 வயது), டியான் ஜோனி குர்னியாட் (26), முகமட் அலி (40 வயது) அஃபிப் என்ற சுனாகின் (வயது தெரியவில்லை) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எட்டாவதாக நேற்று மரணமடைந்தவர் வெடிகுண்டு வெடித்த இடத்தில் இருந்த வங்கி ஒன்றின் ஊழியர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Bomb and gun attacks rock Indonesian capitalஜாகர்த்தா தாக்குதலுக்குப் பின்னர் காவல் துறையினர் கைப்பற்றிய வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பான பொருட்கள்….

பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தோனேசியாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், தூதரகங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள், சுற்றுலாத் தளங்கள் அனைத்தின் மீதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

உலகிலேயே அதிகமான முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனேசியாவில், உள்நாட்டுத் தீவிரவாதம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றது என்றாலும், ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் அந்த நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதம் தலைதூக்கி வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஜாகர்த்தா தாக்குதலைத் தொடர்ந்து மலேசியாவிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் மூன்று மலேசியர்கள் துருக்கியில் கைது செய்யப்பட்டு, மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.