உணவகத்தின் உரிமையாளரான மாலிஸ் கார்னர் செண்ட்ரியான் பெர்காட் என்ற நிறுவனம், வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கிய உணவிற்கான ரசீதில் 95 காசுகள் ஜிஎஸ்டி சேர்க்காமல் விட்டதால், சுங்கத்துறைக்கு அந்நிறுவனம் அதை செலுத்த வேண்டும் என்றும், அபராதமும் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான அதன் இயக்குநர் ஜமாலி சாட் தங்களுடைய தவறை ஒப்புக் கொண்டதையடுத்து நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, செதாப்பாவில் உள்ள ஜாலான் லங்காவி என்ற இடத்தில் அமைந்திருக்கும் அந்த உணவுக்கடையில் அக்குற்றம் நடந்துள்ளது.
ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருந்து கொண்டு, தங்களுடைய ரசீதில் ஜிஎஸ்டி-க்கான தொகையை சேர்க்காதது சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகின்றது.
அக்குற்றத்திற்கு சட்டப்படி, 30,000 ரிங்கிட் அபராதமோ அல்லது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையோ வழங்கப்படலாம்.
(குறிப்பு: மேலேயுள்ள ‘சார் கொய் தியாவ்’ படம் மாதிரிக்காக வைக்கப்பட்டுள்ளது).