Home Featured நாடு தைப்பூசம் கோலாகலமாகத் தொடங்கியது – பத்துமலை நோக்கி வெள்ளி இரதம் பவனி!

தைப்பூசம் கோலாகலமாகத் தொடங்கியது – பத்துமலை நோக்கி வெள்ளி இரதம் பவனி!

639
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் இந்துப் பெருமக்களின் முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படும் தைப்பூசம் நேற்று முதல் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே, பத்துமலை வளாகம் கடைகள் போடப்படுவது முதல், பக்தர்கள் காவடி எடுப்பது என ஏற்கனவே களை கட்டிவிட்டது.

Thaipusam-chariot-2016நேற்றிரவு ஸ்ரீ முருகன் வீற்றிருக்க புறப்பட்ட வெள்ளி இரதம்…

இருப்பினும் கோலாலம்பூர் பத்துமலையில் நடைபெறும் தைப்பூசத்தின் அதிகாரபூர்வத் தொடக்கம் என்பது ஸ்ரீ முருகப் பெருமான் வீற்றிருக்க, வெள்ளி இரதம், கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்படுவதிலிருந்து தொடங்குகின்றது.

#TamilSchoolmychoice

நேற்றிரவு மலேசியாவின் தாய்க் கோவிலாகக் கருதப்படும் கோலாலம்பூர், ஜாலான் பண்டாரிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட வெள்ளி இரதம் தற்போது சனிக்கிழமை காலையில் பத்துமலையை நோக்கி பக்தர்கள் புடைசூழ சென்று கொண்டிருக்கின்றது.

Thaipusam-Chariot-procession-2016

கோலாலம்பூர் தெருக்களில் வெள்ளி இரதம் இன்று அதிகாலை பத்துமலை நோக்கி சென்று கொண்டிருக்கும் காட்சி….

இன்று பிற்பகல் பத்துமலையை வெள்ளி இரதம் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர் நடைபெறும் கொடியேற்று விழாவோடு, தைப்பூசத் திருவிழா அதிகாரபூர்வமாக பத்துமலையில் தொடக்கி வைக்கப்படும்.