லங்காவி – மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் ஆசியா, அடுத்த 5 வருடங்களுக்குள் லங்காவிக்கு 4 மில்லியன் சுற்றுலாப்பயணிகளைக் கொண்டு வரவேண்டும் என்ற திட்டத்துடன் இயங்கி வருவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏர் ஆசியா தலைவர் டோனி பெர்னாண்டஸ் கூறுகையில், “அனைத்துலக வழித்தடங்களில் இருந்து லங்காவிக்கு அதிகமான போக்குவரத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். லங்காவியில் இருந்து ஜகார்த்தா, பாங்காக், சென்சென், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகிய நகரங்களுக்கும் போக்குவரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.”
“2015-ல், லங்காவிக்கு 1.6 மில்லியன் பயனர்கள் ஏர் ஆசியாவில் பயணம் செய்துள்ளனர். தற்போது எங்களின் இலக்கு, கூடுதலாக 3 மில்லியன் பயனர்களை லங்காவிக்கு கொண்டு வருவதாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.