இது தொடர்பாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ள செய்தியில், “ஆப்பிள் நிறுவனம் ஐதராபாத்தில் சுமார் 2.5 லட்சம் சதுர அடி என்கிற அளவில் அலுவலக இடம் ஒன்றை பிரபல நிலபேர நிறுவனம் ஒன்றின் மூலம் பார்த்து வருகிறது. குறிப்பிட்ட அந்த இடத்தை 10 வருட குத்தகைக்கு எடுத்த பிறகு, அங்கு வளர்ச்சி மையம் அமைக்க முயற்சிக்கலாம் என்று கூறப்படுகிறது. வளர்ச்சி மையம் குறித்த பேச்சுவார்த்தையையும் தெலுங்கானா அரசிடம் ஆப்பிள், ஏற்கனவே தொடங்கி விட்டது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல்களை தெலுங்கானா தகவல் தொடர்புத்துறை அமைச்சர் வெளியிட மறுத்துவிட்டார். அதேபோல் ஆப்பிள் நிறுவனமும் வளர்ச்சி மையம் தொடர்பான செய்திகளை வெளியிட மறுத்துவிட்டது. எனினும், தெலுங்கானா அரசு வட்டாரங்கள், ஐதராபாத்தில் ஆப்பிள் வளர்ச்சி மையம் உறுதி என்றே கூறுகின்றன.