Home Featured நாடு தன்னை யாரும் ராஜினாமா செய்யச் சொல்லவில்லை என்கிறார் முக்ரிஸ்!

தன்னை யாரும் ராஜினாமா செய்யச் சொல்லவில்லை என்கிறார் முக்ரிஸ்!

663
0
SHARE
Ad

mukrizகோலாலம்பூர் – கெடா அரசப் பேராளர்கள் மன்றம் தன்னை ராஜினாமா செய்யக் கூறியதாக இணையதளங்களில் வெளிவந்த செய்தியை கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் மறுத்துள்ளார்.

“முன்னணி இணையதளங்கள் மற்றும் நஜிப் ஆதரவு வலைத்தளங்களில் கெடா அரசப் பேராளர்கள் மன்றம் என்னை ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திடச் சொல்லியதாகவும், நான் கையெழுத்திட மறுத்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை” என்று முக்ரிஸ் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலையே முக்ரிஸ் பதவி நீக்கம் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice