Home Featured நாடு மகாதீர் மீது கோபமாக உள்ளவர்கள் புகார் அளியுங்கள் – ஐஜிபி கூறுகின்றார்!

மகாதீர் மீது கோபமாக உள்ளவர்கள் புகார் அளியுங்கள் – ஐஜிபி கூறுகின்றார்!

896
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – சுவிஸ் விவகாரத்தில், சட்டத்துறைக்கு எதிராகவும், நஜிப்புக்கு எதிராகவும் கடந்த வாரம் புதன்கிழமை கருத்துத் தெரிவித்த மகாதீர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்பவர்கள் அவர் மீது புகார் அளியுங்கள் என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

“சில வழக்குகளில் யாரும் புகார் அளிக்காமலேயே நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வழக்கில் யாராவது புகார் அளித்தால் மட்டுமே விசாரணை செய்ய இயலும்” என்று காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

“மகாதீரின் மீது கோபமாக (அவரது கருத்து தொடர்பில்) உள்ளவர்கள் அவருக்கு எதிராக புகார் அளிக்கலாம். நாங்கள் சட்டம் மீறப்பட்டுள்ளதா? என்று விசாரணை செய்வோம்” என்று காலிட் இன்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த வாரம் தனது வலைத்தளத்தில் மகாதீர் வெளியிட்ட கருத்து ஒன்றில், சுவிஸ் சட்டத்தை மீறி 4 பில்லியன் அமெரிக்க டாலர் மலேசியாவிற்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்தது 1எம்டிபி பணமா? இல்லையா?  என்பதை சுவிஸ் ஏஜி கண்டுபிடித்திடாத வகையில் மலேசிய ஏஜி (தலைமை வழக்கறிஞர் மன்றம்) மறைக்க முயற்சி செய்கிறது என்றும் மகாதீர் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.