Home Featured கலையுலகம் ‘புலி’ இசை வெளியீட்டு விழாவிற்குப் பிறகு மன உளைச்சலில் தவித்தேன் – டி.ஆர் உருக்கம்!

‘புலி’ இசை வெளியீட்டு விழாவிற்குப் பிறகு மன உளைச்சலில் தவித்தேன் – டி.ஆர் உருக்கம்!

732
0
SHARE
Ad

t-rajendarசென்னை – புலி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்குப் பிறகு, வேறு எந்த இசை வெளியீட்டு விழாக்களிலும் தலைகாட்டாமல் இருந்தார் விஜய் டி.ராஜேந்தர்.

அதற்கான காரணத்தை ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் நடித்துள்ள போக்கிராஜா படத்தின் ‘அத்துவுட்டா’ பாடல் வெளியீட்டு விழாவில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் ராஜேந்தர்.

புலி வெளியீட்டு விழாவிற்குப் பிறகு தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாக டி.ராஜேந்தர் அவ்விழாவில் பேசிய போது தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

புலி என்ற வார்த்தையை வைத்துத் தான் அடுக்கு மொழியாகப் பேசியதை, இன்று வரை பலரும் கிண்டலும், கேலியும் செய்து வருவது தான், டி.ராஜேந்தரை மன உளைச்சலுக்குத் தள்ளியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

அவ்விழாவில் டி.ராஜேந்தர் பேசுகையில், “விஜய்யின் புலி பட பாடல் நிகழ்ச்சிக்குப் பிறகு வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளப்போவதில்லை என்ற முடிவில் இருந்தேன். ஏனென்றால் அவ்விழாவில் புலி என்ற சொல்லில் அடுக்கு மொழியில் பேசினேன். காரணம், புலி என்றால் பிடிக்கும். ஈழத்தமிழர்களுடைய ஆதரவாளன் நான். இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்காக என் பதவியையே ராஜினாமா செய்தவன் நான்.”

“டி.ராஜேந்தர் இதற்கு முன்னாடி இப்படி அடுக்குவான் என்று தெரியாதா. நீ நக்கல் பண்ணினால், நானும் நக்கல் பண்ணுவேன். வாழ்க்கையில் யார் தான் நக்கல் பண்ணவில்லை. நான் அத்தனை புலியை அடுக்கினேன் என்றால் எல்லாமே என் மனதில் இருந்து வந்தது. ‘புலி’ என்று தலைப்பு வைத்ததற்கு ஒரு தில் வேண்டும். அந்த தில்லை வைத்து தான் என்னிடம் இருந்து சொல் வந்தது.”

“என் பார்வையில் பார்த்தால் நான் பேசியது தப்பில்லை. ஆனாலும் அந்த விழாவிற்குப் பிறகு  மன உளைச்சலுக்கு ஆளானேன். எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வரவில்லை என்று சொல்லிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.