Home Featured நாடு பிள்ளைகள் மதமாற்ற விவகாரம்: “எனது மகனை இழந்துவிட்டேன்” – தீபா கண்ணீர்!

பிள்ளைகள் மதமாற்ற விவகாரம்: “எனது மகனை இழந்துவிட்டேன்” – தீபா கண்ணீர்!

898
0
SHARE
Ad

Deepaகோலாலம்பூர் – பெற்றோரில் ஒருவர் சம்மதம் இன்றி, பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்படும் விவகாரத்தில், மலேசியாவில் அமலில் உள்ள சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பாதிகப்பட்ட எஸ்.தீபா என்பவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தீபாவின் அனுமதியின்றி அவரது கணவர், அவர்களது இரு பிள்ளைகளை மதமாற்றம் செய்ததால் நீதிமன்றத்தை நாடிய தீபாவிற்கு இன்று கூட்டரசு நீதிமன்றம் மகனை பராமரிக்கும் உரிமையை வழங்க மறுத்துவிட்டது.

மகனைப்  பாராமரிக்கும்  உரிமையை  அவரின்  முன்னாள்  கணவர்  வீரன் என்ற இஸ்வான்  அப்துல்லாவிடமும், மகளைப்  பராமரிக்கும்  உரிமையை தீபாவிடமும் ஒப்படைத்து கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

#TamilSchoolmychoice

மலேசியாவில் அமலில் உள்ள சட்டத்தால், தனது மகனை இழந்துவிட்டதாக எஸ்.தீபா குற்றம் சாட்டியுள்ளார்.

இரு பிள்ளைகளும் தன்னிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த தீபாவிற்கு கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பேரதிர்ச்சியைத் தந்துள்ளது.

தனக்கு நேர்ந்த இந்த துன்பம் மலேசியாவில் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்றும், விரைவில் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் தீபா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு தீபாவை விவாகரத்து செய்த இஸ்வான் இஸ்லாத்தைத் தழுவினார். பின்னர் 2013-ம் ஆண்டு தீபாவின் அனுமதியின்றி தனது இரண்டு பிள்ளைகளையும் மதமாற்றம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.