ஆசியான் தலைவர்கள் நேற்று (மலேசிய நேரப்படி இன்று) ஒன்றிணைந்ததன் நோக்கம், ஆசியானின் பொருளாதார வளர்ச்சியை, கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோர் மூலமாக வலுவடையச் செய்வதாகும்.
வெளியுறவுத்துறை அமைச்சர் அனிஃபா அமான் மற்றும் அனைத்துலக வர்த்தக மற்றும் தொழிற்சாலைகளின் அமைச்சர் முஸ்தபா மொகமட் ஆகிய இருவரும் பொருளாதார விவகாரங்கள் குறித்த கலந்துரையாடலில் நஜிப்புடன் கலந்து கொண்டனர்.
2015-ம் ஆண்டு ஆசியானுக்குத் தலைமைவகித்த மலேசியா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோலாலம்பூர் மூன்றாவது ஆசியான் – அமெரிக்க கருத்தரங்கை நடத்தியது குறிப்பிடத்தக்கது.