Home Featured தமிழ் நாடு பிப்ரவரி 22 முதல் வேட்பாளர்களை நேர்காணல் செய்கிறார் கருணாநிதி!

பிப்ரவரி 22 முதல் வேட்பாளர்களை நேர்காணல் செய்கிறார் கருணாநிதி!

647
0
SHARE
Ad

karunanidhiசென்னை – எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல், வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கு போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்தில் விண்ணப்பம் தந்துள்ளவர்களை தலைவர் கலைஞர் அவர்கள்,  22.2.2016 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் பின்வரும் மாவட்ட வாரியாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் – வெற்றி வாய்ப்புகள் குறித்து அறிந்திட இருக்கிறார்கள்.”

“குறிப்பிட்டுள்ள தேதிகளில், குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர் மட்டும் வரவேண்டும். மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதிச் செயலாளர்கள் வரவேண்டிய அவசியமில்லை வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ – பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.” – இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மாவட்ட வாரியாக நேர்காணல் விவரங்களைக் கீழே உள்ள படத்தில் காணலாம்:-

DMK