Home Featured நாடு அம்னோ துணைத்தலைவர் பதவியிலிருந்து மொகிதின் இடைநீக்கம்!

அம்னோ துணைத்தலைவர் பதவியிலிருந்து மொகிதின் இடைநீக்கம்!

1053
0
SHARE
Ad

muhyiddin_2கோலாலம்பூர் – 2.6 பில்லியன் நன்கொடை மற்றும் 1எம்டிபி விவகாரத்தில், அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை தொடர்ந்து விமர்சித்து வருவதால், அக்கட்சியின் துணைத்தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது அம்னோ உச்சமன்றம்.

அதன் படி, அடுத்த பொதுத்தேர்தல் வரை தற்காலிகமாக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் மொகிதின்.

எனினும், இந்த நடவடிக்கை அவரது தொகுதித் தலைவர் பொறுப்பை பாதிக்காது என அம்னோ பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் இன்று அறிவித்துள்ளார்.