Home Featured நாடு மக்கள் பிரகடனத்திற்கு 76 சதவிகிதம் பேர் ஆதரவு – மலேசியாகினி கருத்துக் கணிப்பு!

மக்கள் பிரகடனத்திற்கு 76 சதவிகிதம் பேர் ஆதரவு – மலேசியாகினி கருத்துக் கணிப்பு!

530
0
SHARE
Ad

najib mahathir rivals PCகோலாலம்பூர் – நஜிப்பை பதவியிலிருந்து வெளியேற்ற கடந்த வாரம் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையில் கையெழுத்திடப்பட்ட மக்கள் பிரகடனம் குறித்து, மலேசியாகினி கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.

மலேசியாகினியின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் நடத்தப்பட்ட அக்கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 5,852 பேரில் 76.2 சதவிகிதம் பேர், அப்பிரகடனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 11.6 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில், 8.8 சதவிகிதம் பேர் இந்தப் பிரகடனம் சாத்தியப்படுமா என்ற சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மேலும், 1.3 சதவிகிதம் பேர் இந்த ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். 2.4 சதவிகிதம் பேர் அதைப் பற்றி தாங்கள் கவலைப்படவில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.