Home Featured நாடு மார்ச் 16 -ல் புதிய எதிர்கட்சி – பாஸ் அறிவித்தது!

மார்ச் 16 -ல் புதிய எதிர்கட்சி – பாஸ் அறிவித்தது!

584
0
SHARE
Ad

bassகோலாலம்பூர் – வரும் மார்ச் 16-ம் தேதி, பல்லின கட்சி ஒன்றுடன் இணைந்து புதிய எதிர்கட்சி ஒன்றை உருவாக்கவுள்ளதாக பாஸ் கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ தாகியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

பாஸ் கொள்கைகளுடன் ஒத்துப் போகும் பிற கட்சிகளுடன் கைகோர்க்கவிருப்பதாக கோலாலம்பூரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பக்காத்தான் ஹராப்பானுடன் பாஸ் கட்சி இணையாது என்றும், அம்னோவுடன் இஸ்லாமிய விவகாரங்களில் மட்டும் பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அடுத்த பொதுத்தேர்தலில், பாரிசான், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தாங்கள் அமைக்கும் புதிய எதிர்கட்சி ஆகியவற்றால் மும்முனைப் போட்டி உருவாகலாம் என்றும் தாகியுடின் தெரிவித்துள்ளார்.