Home Featured உலகம் பிரிட்டனில் கண்- காது-மூக்கில் ரத்தம் வழியும் அதிசயப் பெண்!

பிரிட்டனில் கண்- காது-மூக்கில் ரத்தம் வழியும் அதிசயப் பெண்!

564
0
SHARE
Ad

harvey_006பிரிட்டன்  – பிரிட்டன் நாட்டில் இளம்பெண் ஒருவரின் கண், காது, மூக்கு விரல்கள் என அனைத்து உறுப்புகளிலும் ரத்தம் வழிவது எதனால் என காரணம் தெரியாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள ஸ்டாக் டிரன் நகரில் 17 வயதான மெரின் என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயது ஆகும் வரை ஏனைய பெண்கள் போலவே வாழ்ந்து வந்துள்ளார்.

ஆனால், 2013-ஆம் ஆண்டில் இருந்து இவருக்கு ஒவ்வொரு அதிசய சம்பவங்கள் ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருநாள் படுக்கையில் இருந்த எழுந்தபோது, அவரது தலையணையில் ரத்த வழிந்துள்ளதை பார்த்து வியப்படைந்த கண்ணாடியில் தனது முகத்தை பார்த்துள்ளார்.

#TamilSchoolmychoice

harvey_004அப்போது, அவரது மூக்கில் இருந்தும் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உடனடியாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். மகளின் முகத்தை கண்டு கண்ணீர் வடித்த தாயார் அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.

மருத்துவமனையில் அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டது. ஆனானும், ஏன் அனைத்து உறுப்புகளிலும் ரத்தம் வழிகின்றது என காரணம் தெரியாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.