Home Featured தமிழ் நாடு தமிழகத்தில் அனைத்து நகை கடைகளிலும் ஒரே அளவு சேதாரம் – நகை வியாபாரிகள் சங்கம் முடிவு!

தமிழகத்தில் அனைத்து நகை கடைகளிலும் ஒரே அளவு சேதாரம் – நகை வியாபாரிகள் சங்கம் முடிவு!

686
0
SHARE
Ad

gold3_25042011-702x432சென்னை – அனைத்து நகைகடைகளிலும் ஒரே அளவு சேதாரம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை வைரம் மற்றும் தங்க வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் தெரிவித்துள்ளார்.

தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால்வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்க நகை நிறுவனங்கள், வியாபாரிகள், தங்க நகை தொழில் சார்ந்த தொழிற்கூடங்கள் அனைத்தும் நாடு முழுவதும் கடந்த 2-ஆம் தேதி முதல் காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த போராட்டம் குறித்து சென்னை வைரம் மற்றும் தங்க வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ”கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நாங்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அடுத்த கட்டமாக, மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் ஊர்வலமாக செல்ல இருக்கிறோம்.

#TamilSchoolmychoice

jewவரும் 17-ஆம் தேதி டெல்லியில் 5 லட்சம் தங்க நகை வணிகர்கள், வியாபாரிகள் பங்கேற்கும் போராட்டம் நடைபெற உள்ளது. அதிலும் நாங்கள் பங்கேற்க உள்ளோம்.

அதற்குள் மத்திய அரசிடம் இருந்து நல்ல பதில் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி வரவில்லை என்றால், மத்திய அரசு விதித்த கலால்வரியை திரும்ப பெறும்வரை எங்கள் போராட்டம் தொடரும்.

தமிழகத்தில் இந்த கடை அடைப்பு போராட்டத்தால், இதுவரை ரூ.3,150 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் ரூ.90 ஆயிரம் கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுத்து இருக்கிறோம். அதாவது, தங்க நகைகளுக்கான சேதாரம் ஒவ்வொரு கடைகளுக்கும் வித்தியாசப்பட்டு காணப்படும்.

அந்த வித்தியாசத்தை போக்கும் வகையில், அனைத்து தங்க நகை கடைகளிலும் ஒரே சேதாரத்தை கொண்டு வருவதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இதற்கு அனைத்து தங்க நகை வியாபாரிகளும் ஒத்துழைப்பு தந்து இருக்கிறார்கள். எங்களுடைய இந்த போராட்டம் முடிவுக்கு வந்ததும் இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையை நாங்கள் செய்ய முடிவு செய்ய இருக்கிறோம்” என்றார்.