Home Featured கலையுலகம் நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகரை நீக்கவில்லை – நாசர் தகவல்!

நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகரை நீக்கவில்லை – நாசர் தகவல்!

778
0
SHARE
Ad

sarath, radharavi, vagai600சென்னை – சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக செய்திகள் வெளியாகின.

நடிகர் சங்கத்தின் இந்த முடிவு தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சங்கக் கட்டிடம் தொடர்பாக எழுந்த பிரச்சினை 3 முறை தலைவராக இருந்த சரத்குமாரின் மீது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கடந்த ஆண்டு நடந்த சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வென்று நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளைக் கைப்பற்றினர்.

#TamilSchoolmychoice

விஷால், நாசர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்று 6 மாதங்கள் கடந்த பின்னரும் கூட சரத்குமார் நடிகர் சங்கத்தின் கணக்கு வழக்குகளை ஒப்படைக்கவில்லை.

இது குறித்து பலமுறை நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்தும் கணக்குகளை ஒப்படைக்க சரத்குமார் முன்வரவில்லை. இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி சரத்குமார் மீது பலகோடி ஊழல் செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரை சட்டப்படி சந்திப்பேன் என்று சரத்குமார் தெரிவித்து இருந்தார். இது குறித்து அவர் மனைவி ராதிகா, நடிகர் சங்க அறக்கட்டளையில் என்ன பணம் இருந்தது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட மூவரையும் நடிகர் சங்கத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இந்த செய்தி உண்மையில்லை என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் மறுப்புத் தெரிவித்திருக்கிறார். மேலும் இன்னும் எந்த முக்கிய முடிவுகளும், நடிகர் சங்கத்தில் எடுக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.