Home Featured தமிழ் நாடு தமிழக தேர்தலில் 33% பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு – விஜயகாந்த்!

தமிழக தேர்தலில் 33% பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு – விஜயகாந்த்!

587
0
SHARE
Ad

election Narganalசென்னை – தமிழக சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தே.மு.தி.க. தலைமை மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை விஜயகாந்த் தேர்வு செய்ய உள்ளதாக கட்சியின் மாநில நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தவிர்த்த திமுக அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று அதிரடியாக அறிவித்தார் விஜயகாந்த்.

இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியதுடன், அரசியல் கட்சிகளின் கூட்டணி கனவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தற்போது, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தேர்வு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

தே.மு.தி.க. சார்பில் போட்டியிட கடந்த மாதம் 5-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு செய்திருந்தனர். அவர்களிடம் கடந்த 1-ஆம் தேதி வரை தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நேர்காணல் நடந்தது.

vijaykanth- Womans longஇந்நிலையில், வேட்பாளர்கள் தேர்வு குறித்து தே.மு.தி.க. மாநில நிர்வாகிகள் கூறுகையில், தே.மு.தி.க. தனித்து போட்டி என்று விஜயகாந்த் அறிவித்து விட்டதால், 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை விஜயகாந்த் தலைமையிலான குழுவினர் தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

33 சதவீதம் பெண் வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். கும்மிடிப்பூண்டி தொகுதியிலிருந்து தொடங்கி தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் முதலில் நேர்காணல் நடத்தப்பட்டது.

கல்வி, தேர்தல் செலவு, தொகுதியில் உள்ள வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு வேட்பாளர்கள் தேர்வு நடைபெறுகிறது.

தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களின் பட்டியல் விஜயகாந்திடம் சமர்ப்பிக்கப்படும். அவர் அந்த பட்டியலுக்கு இறுதி வடிவம் கொடுத்து, வேட்பாளர்களை முறைப்படி அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.