Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தலில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் – திமுக முடிவு!

தமிழகத் தேர்தலில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் – திமுக முடிவு!

643
0
SHARE
Ad

சென்னை – திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக  கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தலைமையில் மேலிட தலைவர்கள் 23-ஆம் தேதி சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்தக் குழுவினர் கருணாநிதியை சந்தித்து பேசவுள்ளதாகவும். அப்போது, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இதில் காங்கிரஸ் சார்பில் தமிழத்தில் போட்டியிட விரும்பும் தொகுதிகளில் குறித்த பட்டியலை கருணாநிதியிடம் குலாம் நபி ஆசாத் வழங்குவுள்ளார்.