Home Featured உலகம் பிரசல்ஸ் தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் நடத்தியதை ஒப்புக் கொண்டது!

பிரசல்ஸ் தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் நடத்தியதை ஒப்புக் கொண்டது!

462
0
SHARE
Ad

பிரசல்ஸ் – நேற்று நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

அதேவேளையில் முதல் கட்ட புலனாய்வுகளின்படி, கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி நடந்த பாரிஸ் தாக்குதலைத் திட்டமிட்ட அதே குழுவினர்தான், பிரசல்ஸ் தாக்குதலின் பின்னணியிலும் இருந்திருக்கின்றனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

At least 1 dead after explosions at Brussels airport, subwayநேற்றைய தாக்குலின்போது பிரசல்ஸ் விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டபோது…..

#TamilSchoolmychoice

பெல்ஜியம் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும், மாபெரும் தேடுதல் வேட்டையொன்றைத் தொடக்கியுள்ளது. தங்களுக்குக் கிடைத்த தகவல்களை அமெரிக்காவுடன் பெல்ஜியம் அதிகாரிகள் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பெல்ஜியம் தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 230 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் இன்னும் முரண்பாடான தகவல்களை தகவல் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 என நேற்று அமெரிக்கத் தொலைக்காட்சியான சிஎன்என் அறிவித்த வேளையில், மற்ற சில தகவல் ஊடகங்கள் 30 எனத் தெரிவித்துள்ளன.

Police photo of alleged Brussels airport attacker

பிரசல்ஸ் விமான நிலையத்தைத் தாக்கிய சந்தேக நபர் இவன்தான் என பெல்ஜியம் போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ள படம்…