Home Featured உலகம் பெல்ஜியம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு!

பெல்ஜியம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு!

501
0
SHARE
Ad

tiga-pelaku-bom-bandara-brussels-tertangkap-kamera-s2HL1XMVaaபுரூசெல்ஸ் – பெல்ஜியம் தலைநகர் புரூசெல்சில் உள்ள ஸவன்டெம் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தில் 34 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

ஸவன்டெம் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் படங்கள் வெளியாகியுள்ளன. விமான நிலைய கேமராவில் பதிவாகியுள்ள படத்தில் 3 இளைஞர்கள் கை தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைவது பதிவாகியுள்ளது.

படத்தில் வலது பக்கத்தில் இருப்பவன் தப்பி ஓடிவிட்டதாகவும் அவனை தேடும் பணி நடைபெற்று வருவதாகம் அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தை நாங்கள்தான் நடத்தியதாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.