Home Featured தமிழ் நாடு மக்கள் நலக்கூட்டணியில் 40 தொகுதிகளில் ம.தி.மு.க. போட்டி

மக்கள் நலக்கூட்டணியில் 40 தொகுதிகளில் ம.தி.மு.க. போட்டி

632
0
SHARE
Ad

Tamil-Daily-News_31267511845சென்னை – மக்கள் நலக்கூட்டணியில் 40 தொகுதிகளில் ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 35 தொகுதிகளில் போட்டியிடவும் தயாராகி வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. அக்கட்சி தலைவர் விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விஜயகாந்த் தலைமையிலான இந்த கூட்டணிக்கு வைகோ ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தே.மு.தி.க.வுக்கு 124 தொகுதிகளும், மக்கள் நலக் கூட்டணிக்கு 110 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி விரைவில் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்படும் என்று வைகோ தெரிவித்துள்ளார். இதற்கிடையே மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள 4 கட்சிகளும் தொகுதி பங்கீடு செய்து கொள்வது பற்றியும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது பற்றியும் பேச்சு வார்ததையை தொடங்கி உள்ளது.

#TamilSchoolmychoice

மக்கள் நலக்கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 110 தொகுதிகளில் ம.தி.மு.க. 40 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது. திருமாவளவனும் 40 தொகுதிகள் ஒதுக்குமாறு கடிதம் கொடுத்துள்ளார். அவரது கட்சிக்கு 35 தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மீதம் உள்ள 35 தொகுதிகளை இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் 20–15 என்ற அளவில் பிரித்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

ம.தி.மு.க. தனக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் எவை என்பதை கண்டறிந்து தேர்வு செய்து வருகிறது. இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. கம்யூனிஸ்டு கட்சிகளும் தொகுதிகளை தேர்வு செய்து வருகின்றன.

இந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் மட்டும் போட்டியிடுவார்கள் என்றும், வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட மாட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வைகோ மக்கள் நலக் கூட்டணியை தொடர்ந்து வழி நடத்திச் செல்வதற்காக தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மாநில செயலாளராக இருப்பவர் தேர்தலில் நிற்க முடியாது என்பதால் ஜி.ராம கிருஷ்ணன் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் கூறப்படுகிறது. திருமாவளவன் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

மேலும் கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக தொகுதிகளை கேட்டுப் பெறவும் மற்ற மாவட்டங்களில் பரவலாக போட்டியிடவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது.