Home Featured உலகம் எகிப்து விமானம் கடத்தல்: விமானத்தின் ஜன்னல் வழியாகக் குதித்தார் ஒருவர்! இன்னும் 7 பேர் உள்ளே!

எகிப்து விமானம் கடத்தல்: விமானத்தின் ஜன்னல் வழியாகக் குதித்தார் ஒருவர்! இன்னும் 7 பேர் உள்ளே!

651
0
SHARE
Ad

கெய்ரோ – எகிப்து விமானத்தைக் கடத்தி வைத்திருப்பது அலெக்சாண்ட்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பிரிவின் பேராசிரியர் இப்ராகிம் சமாகா என்று முன்னதாக பெரும்பாலான முன்னணி ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள் தற்போது மறுக்கப்பட்டுள்ளது.

தான் விமானத்தைக் கடத்தவில்லை என்றும், தான் பயணிகளில் ஒருவர் தான் என்று பேராசிரியர் இப்ராகிம் சமாகா விளக்கமளித்துள்ளார்.

“நாங்கள் விமானத்தில் ஏறியவுடன், எங்களது கடப்பிதழ்களை விமானப் பணியாளர்கள் வாங்கி வைத்துக் கொண்டனர். உள்நாட்டு விமானங்களில் இது போன்று நடப்பது ஆச்சர்யம் அளித்தது. பின்னர் விமானம் அதிக உயரத்தில் பறப்பதை உணர்ந்தோம். பிறகு தான் தெரிந்தது விமானம் சைப்ரஸ் நோக்கிப் போகின்றது என்று. விமானத்தில் கோளாறு என்று முதலில் விமானப் பணியாளர்கள் கூறினர். பின்னர் தான் தெரிந்தது விமானம் கடத்தப்பட்டது என்று” இவ்வாறு பேராசிரியர் இப்ராகிம் சமாகா கூறியுள்ளதாக ‘டெலகிராப்’, ‘இண்டிபெண்டண்ட்’ உள்ளிட்ட முன்னணி செய்தி இணையதளங்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

எனினும், இந்த விவகாரத்தில் தற்போது வரை முன்னுக்குப் பின் முரணான தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன.

இதனிடையே, சைப்ரஸ் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அண்மையத் தகவலில், கடத்தல்காரனின் பெயர் சையப் எல்டின் முஸ்தபா என்று குறிப்பிட்டுள்ளது.

79c6226b-8b79-443f-b018-12e3ec5f3434இந்நிலையில், தற்போது பிபிசி செய்தி நிறுவனம், கடத்தி வைக்கப்பட்டுள்ள அவ்விமானத்தின் விமானிகள் அறையின் ஜன்னல் வழியாக யாரோ ஒருவர் குதிப்பதைப் போன்ற காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், 4 பயணிகள் மற்றும் 3 பணியாளர்கள் இன்னும் விமானத்தின் உள்ளே இருப்பதாகக் கூறப்படுகின்றது.