Home Featured தமிழ் நாடு பிரசல்ஸ் குண்டுவெடிப்பில் பலியான ராகவேந்திரன் உடல் தகனம் செய்யப்பட்டது!

பிரசல்ஸ் குண்டுவெடிப்பில் பலியான ராகவேந்திரன் உடல் தகனம் செய்யப்பட்டது!

583
0
SHARE
Ad

belgimஆலந்தூர் – பெல்ஜியம் குண்டுவெடிப்பில் பலியான ராகவேந்திரன் உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. சென்னையை அடுத்த சிட்லபாக்கம், ஜோதிமங்களா நகரை சேர்ந்தவர் ராகவேந்திரன்(வயது 32).

இன்போசிஸ் நிறுவன கணினி என்ஜினீயரான இவர், கடந்த 4 ஆண்டுகளாக பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகரில் பணியாற்றிவந்தார்.

கடந்த 22-ஆம் தேதி பிரசல்சில் நடந்த குண்டுவெடிப்பில் 35-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களில் ராகவேந்திரனும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டது.

#TamilSchoolmychoice

பின்னர் ராகவேந்திரன் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ராகவேந்திரன் உடல் பெல்ஜியத்தில் இருந்து அபுதாபி வழியாக சென்னை விமான நிலையத்திற்கு நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது.

அங்கு இருந்து சிட்லப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் வந்தது. ராகவேந்திரன் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்னர் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு இரவு 7 மணிக்கு சிட்லபாக்கம் இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது.

ராகவேந்திரனுக்கு வைசாலி என்ற மனைவியும், அர்ஜூன் என்ற 2 மாத கைக்குழந்தையும் உள்ளனர்.