Home Featured தமிழ் நாடு வைகோ பேசும் போது அசந்து தூங்கிய திருமாவளவன், முத்தரசன்! (காணொளி)

வைகோ பேசும் போது அசந்து தூங்கிய திருமாவளவன், முத்தரசன்! (காணொளி)

655
0
SHARE
Ad

mutharasan-thiruma344திருநெல்வேலி – திருநெல்வேலியில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி மாற்று அரசியல் எழுச்சி பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆவேசத்துடன் உரையாற்றிக் கொண்டிருந்த போது, மேடையில் அமர்ந்திருந்த அவரது கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் அசந்து தூங்கி வழிந்துள்ளனர்.

இதை சில தரப்பினர் படபிடித்துள்ளதோடு, தற்போது அக்காணொளி நட்பு ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

இதனிடையே, வைகோ தொடர்ந்து ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த போது, தொண்டர்களில் சிலர் மற்றவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசியுள்ளனர்.

இதனைக் கண்டு கோபமடைந்த வைகோ,  “பாருங்க.. நான் இங்க உயிரைக் கொடுத்து பேசிக்கொண்டிருக்கிறேன். எல்லாரும் தண்ணி பாட்டிலை எடுத்து வீசிக்கிட்டு விளையாடிக் கொண்டு இருக்காங்க” என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

https://youtu.be/HlCc6UVTJlA