Home Featured நாடு மாணவர்களின் சேர்க்கையைப் பொறுத்து தான் தாய்மொழிப் பள்ளிகள் இயங்கும் – அமைச்சர் தகவல்!

மாணவர்களின் சேர்க்கையைப் பொறுத்து தான் தாய்மொழிப் பள்ளிகள் இயங்கும் – அமைச்சர் தகவல்!

797
0
SHARE
Ad

MAHDZIR KHALIDகோலாலம்பூர் – தேசியப் பள்ளிகளைக் காரணம் காட்டி தாய்மொழிப் பள்ளிகளை அரசு மூடிவிடாது என கல்வி அமைச்சர் மாட்சிர் காலிட் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால் மாணவர் சேர்ச்சையின் அடிப்படையில், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படக்கூடும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று பாரிஷான் நாடாளுமன்ற உறுப்பினர் (புடாடான் தொகுதி) மார்க்கஸ் மோஜிகோ எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மாட்சிர், “கல்விச்சட்டம் பிரிவு 28-ன் படி, தேசிய மற்றும் தாய்மொழிப்பள்ளிகளை நிறுவுவது மற்றும் பராமரிக்கும் பொறுப்பு அமைச்சரின் கீழ் உள்ளதாக சட்டம் வலியுறுத்துகிறது”

#TamilSchoolmychoice

“எனினும், ஒரு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றால், அப்பள்ளி செயல்படுவதை நிறுத்த அமைச்சுக்கு அதிகாரம் உள்ளது” என்று மாட்சிர் எழுத்துப் பூர்வ பதிலளித்துள்ளார்.

மேலும், அவ்வாறு ஒரு பள்ளியின் செயல்பாடு நிறுத்தப்பட்டால், அப்பள்ளியின் ஆசிரியர்கள் வேறு ஒரு பள்ளிக்கு மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் மகாட்சிர் குறிப்பிட்டுள்ளார்.