Home Featured தமிழ் நாடு இலங்கை சிறையில் இருந்த 99 தமிழக மீனவர்கள் விடுதலை!

இலங்கை சிறையில் இருந்த 99 தமிழக மீனவர்கள் விடுதலை!

671
0
SHARE
Ad

tamilnadu_fishman120813சென்னை – இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 99 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 3 மாதங்களில் மட்டும் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 99 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை விடுவிக்கக் கோரி தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இன்று இலங்கை அரசாங்கத்தால் 99 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நாளை அல்லது நாளை மறுநாள் தமிழகம் திரும்புவார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது.