Home Featured தமிழ் நாடு விஜயகாந்த்-வைகோ இடையே திடீர் மோதல்!

விஜயகாந்த்-வைகோ இடையே திடீர் மோதல்!

625
0
SHARE
Ad

vaiko vs vijayakanthசென்னை – கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு, நேற்று காலை, ம.ந.கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ வந்தார். அவருடன், தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி, தமிழ் புலிகள் இயக்கத் தலைவர் திருவள்ளுவன் வந்தனர்.

இருவரையும், கட்சி அலுவலகத்தில் அமர வைத்து, விஜயகாந்திடம் பேசினார் வைகோ. இருவருக்கும், கூட்டணியில், ‘சீட்’ ஒதுக்குமாறு வைகோ கேட்க, அதற்கு விஜயகாந்த் மறுத்துவிட்டார்.

இதனால், அங்கிருந்து ஆவேசமாக வெளியேறிய வைகோ, தே.மு.தி.க., அலுவலகத்திற்கு வெளியே பேட்டியளித்தார். அதில் ‘வீரலட்சுமியும், திருவள்ளுவனும் கூட்டணியில் இணைந்துள்ளனர். இவர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவர்’ என்று கூறினார் வைகோ.

#TamilSchoolmychoice