புதுடில்லி – இன்று புதன்கிழமை மாலை 7.30 மணியளவில் மியன்மார் நாட்டைத் தாக்கிய நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட் போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டது.
ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகள் கொண்ட இந்த நிலநடுக்கம், மியன்மாரின் அரசாங்கத் தலைநகர் நேப்பிடோவில் இருந்து வடக்கே 396 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் முதலில் மையம் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 வினாடிகள் வரை இந்த நிலநடுக்கம் நீடித்தது.
நேப்பாளத்திலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.