Home Featured நாடு கடத்தி வைத்திருக்கும் மலேசியர்களின் புகைப்படத்தை வெளியிட்டது அபு சயாப்!

கடத்தி வைத்திருக்கும் மலேசியர்களின் புகைப்படத்தை வெளியிட்டது அபு சயாப்!

706
0
SHARE
Ad

victor troy 150416கோத்தா கினபாலு – அபு சயாப் இயக்கத்தினர் அண்மையில் தாங்கள் கடத்திச் சென்ற மலேசியர்களின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட அந்த நான்கு மாலுமிகளும் உட்கார்ந்த நிலையில் இருக்கும் அந்தப் புகைப்படத்தில், ஒருவர் “விக்டரி ட்ராய்”, “ஏப்ரல் 8 2016” என்ற வாசகம் கொண்ட அட்டையைக் கையில் வைத்துள்ளார்.

அதேவேளையில், கடந்த ஏப்ரல் 12-ம் தேதி, கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட அபு சயாப், அவர்களை விடுவிக்க பேரம் பேசியதாகவும் தெரிகின்றது.

#TamilSchoolmychoice

நேற்று ஏப்ரல் 14-ம் தேதி, அக்குடும்பத்தினர் சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ அட்னான் சாத்திமிடம் உதவி கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.