Home Featured தமிழ் நாடு வைகோ இன்றுமுதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்!

வைகோ இன்றுமுதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்!

587
0
SHARE
Ad

vaikoசென்னை – மதிமுக பொதுசெயலாளர் வைகோ இன்று காலை சென்னை அண்ணா நகர் -எம்.ஜி.ஆர். காலனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து பிரச்சாரம் செய்கிறார்.

முதற்கட்டமாக, ஏப்ரல் 26-ஆம் தேதி வரை அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன்படி இன்று சென்னை அண்ணா நகர், திரு வி.க.நகர், ஆர்.கே. நகர் உள்ளிட்ட சில சட்டமன்றத் தொகுதிகளிலும், நாளை தேனி, மதுரை மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்கிறார்.

வரும் 18-ஆம் தேதி கன்னியாகுமரி, 19-ஆம் தேதி நெல்லை, 20-ஆம் தேதி தூத்துக்குடி, 21-ஆம் தேதி விருதுநகர், 22-ஆம் தேதி சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.

#TamilSchoolmychoice

வரும் 23-ஆம் தேதி அரியலூர், திருச்சி, 24-இல் கரூர், திருப்பூர், கோவை, 25-இல் கோவை, திருப்பூர், ஈரோடு. 26-இல்  விழுப்புரம் மாவட்டத்திலும் வைகோ பிரச்சாரம் செய்கிறார்.