Home Featured கலையுலகம் ‘தெறி’ கட்டாயம் பார்க்க வேண்டிய படம் – நயன்தாரா விமர்சனம்!

‘தெறி’ கட்டாயம் பார்க்க வேண்டிய படம் – நயன்தாரா விமர்சனம்!

772
0
SHARE
Ad

Theriசென்னை – நேற்று முன்தினம் வெளியான ‘தெறி’ திரைப்படம் தன்னை மிகவும் கவர்ந்ததாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். தொடர் வெற்றிகளால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக நயன்தாரா திகழ்கிறார்.

இவர் நடிப்பில் ‘திருநாள்’, ‘இது நம்ம ஆளு’ என வரிசையாக படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகி விஜய் ரசிகர்களை வசீகரித்த ‘தெறி’ படம், தன்னை மிகவும் கவர்ந்தது என நயன்தாரா பாராட்டியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது;- ‘தெறி’ குழுவிற்கு வாழ்த்துக்கள். பொழுதுபோக்குடன் கூடிய உணர்வு பூர்வமான படம். விஜய்யின் நடிப்பு ரசிகர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறது. மொத்தத்தில் ‘தெறி’ கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்’ என்று பாராட்டியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

சமந்தா வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என்று அட்லீ கூறியபோது, விஜய் அதனை மறுத்ததாக செய்திகள் வெளியாகின. மேலும் நயன்தாராவுடன் இணைந்து நடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று விஜய் கூறியதாகவும் கிசுகிசு எழுந்தது. இந்நிலையில் நயன்தாரா தெறியைப் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.